நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

Original post written in Aug 2012 in siliconshelf site https://nanjilnadan.com/2012/08/18/நாஞ்சில்நாடனுடன்சில-நாட/ நாஞ்சில் சிலிக்கானில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து : கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன… Continue reading நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

கொற்றவை நாவல் – ஒரு பார்வை

https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1 சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது. கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை 2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான வாசிப்புகள் நிகழவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அவை பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இந்த கட்டுரையை எழுதி எழுத்தாளர் ஜெ.விற்கு அனுப்பியபோது, அவர் அதுவரை (2014 வரை) வந்த வாசகர் கடிதங்களில் இது மிகச்சிறந்தது என்று பதில் எழுதியிருந்தார். கடந்த ஏழு வருடங்களில் என்… Continue reading கொற்றவை நாவல் – ஒரு பார்வை

அரூ கதைகள் குறித்து:

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. என்னுடைய கதை வலசை இறுதிப்பட்டியலில் தேர்வானது குறித்து தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.  தீவிர இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் அடங்குமா? என்ற விவாதம் ஓய்ந்து இப்பொழுது அறிவியல் புனைவும் இலக்கியமே என ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு நிஜமான ஊகப்புனைவை விட எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு அறிவியல் புனைவுகளில் இரண்டாம் இடமே. அதில் எனக்கு எவ்வித மாற்றுக்… Continue reading அரூ கதைகள் குறித்து:

வலசை [கதை]

அரூ இனைய இதழில் வந்துள்ள என் முதல் கதை. பெரும் பிளவைப் பாதுகாத்த சிம்மநாகத்தையும், பறக்கும் மதகரியையும் அழித்து முன்னேறினான் அதிரதி அக்காடியன். அவனுடைய குறளர் படை வடம் பிடித்து இழுத்து, வெறித்த விழிகளுடன் நின்றிருந்த சதுக்கபூதத்தைக் கீழே சரித்தது.  [மேலும் படிக்க]

இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.

காந்தி :  ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன். கேள்வி… Continue reading இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.