எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதங்களும், அவருடைய தளத்தில் வந்த பதில்களும். தெய்வத்தின் முகங்கள் தெய்வத்தின் முகங்கள் April 10, 2012 அன்புள்ள ஜெ, நலமா ? உங்கள் ‘திருமுகப்பில்’ கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை. என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, ‘மூன்றாம் உலகக் கிறித்தவன்’ என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன். சீன… Continue reading சில கடிதங்கள்
Month: May 2021
விஷ்ணுபுரம் நாவல் – ஒரு பார்வை
நான் கண்ட விஷ்ணுபுரம் Post originally written in March 2012 in siliconshelf site https://vishnupuram.com/tag/விசு/ இந்த பதிவை மார்ச் 2012 இல் எழுதினேன். அப்பொழுது இணையத்தில் விஷ்ணுபுரம் நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவு. எழுத்தாளர் கடலூர் சீனு ஜெ. தளத்தில் விஷ்ணுபுரம் வாசிப்பை குறித்த அருமையான கடிதங்களை எழுதியிருந்தார். அந்த கடிதங்களை தவிர்த்தால் நேர்மறையான பதிவுகள் மிக குறைவாக இருந்தன. நாவலை வாசிக்காமலே எழுதப்பட்ட பதிவுகள், காழ்ப்புகளே மிகுதி. நண்பர் சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில்… Continue reading விஷ்ணுபுரம் நாவல் – ஒரு பார்வை
எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
Original post written in siliconshelf website July 2012 [“கலங்கிய நதி” நாவல் பற்றிய ஒரு சிறிய உரை] நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன்எழுதிய கலங்கிய நதிநாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில்… Continue reading எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்
Original post written in Aug 2012 in siliconshelf site https://nanjilnadan.com/2012/08/18/நாஞ்சில்நாடனுடன்சில-நாட/ நாஞ்சில் சிலிக்கானில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து : கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன… Continue reading நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்
கொற்றவை நாவல் – ஒரு பார்வை
https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1 சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது. கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை 2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான வாசிப்புகள் நிகழவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அவை பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இந்த கட்டுரையை எழுதி எழுத்தாளர் ஜெ.விற்கு அனுப்பியபோது, அவர் அதுவரை (2014 வரை) வந்த வாசகர் கடிதங்களில் இது மிகச்சிறந்தது என்று பதில் எழுதியிருந்தார். கடந்த ஏழு வருடங்களில் என்… Continue reading கொற்றவை நாவல் – ஒரு பார்வை