
இரு கடல் ஒரு நிலம் நூல்
இரு கடல் ஒரு நிலம் மின்னூல்
நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே அது இலக்கியத்தகுதி கொள்கிறது. இந்நூல் நம் பயண இலக்கியங்களில் என்றும் அழியாத ஓர் இடத்தை வகிக்கவிருப்பது
— ஜெயமோகன்
