
விஸ்வநாதன்
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். திருவண்ணாமலை அருகிலுள்ள சீர்ப்பனந்தல் சொந்த ஊர். கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலையும், அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சான் பிரான்சிஸ்கோ நகரில் மென்பொருள்துறையில் பணி. மனைவி பிரமோதினி.
“இரு கடல், ஒரு நிலம்” தமிழில் இவருடைய முதல் நூல். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு நவீனத்தமிழ் இலக்கியத்தையும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு தொழில்நுட்ப கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் “புறப்பாடு” நூல் இவருடைய முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. விரைவில் வெளிவர இருக்கிறது. இவருடைய சிறுகதைகள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கட்டுரைகள் காலம், சியமந்தகம், நீலி, அரூ, சொல்வனம், கிழக்கு டுடே உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.
பி.எஸ்.ஜி கல்லூரியில் “வெண்முரசு நிரல் குழு” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, நான்கு வருடங்களாக மாணவர்களுக்கு கணினி நிரல் போட்டிகளை நடத்திவருகிறார் – https://vpt.ai/
இரு கடல் ஒரு நிலம் – புத்தகம் வாங்க, மின்னூல் வாங்க
Viswanathan
Writer. Translator. Originally from Tiruvannamalai, India, he holds a Masters degree in Computer Science from Georgia Tech, Atlanta and a Bachelors in Information Technology from PSG Tech, Coimbatore. He currently lives in Walnut Creek, CA with his wife, Pramothini and works in San Francisco, CA.
His stories, book reviews, literary criticism, and translations have appeared in various print and online magazines including Kaalam, Syamantakam Neeli, Aroo, Solvanam and Kizhakku Today
Viswanathan established an endowment fund at his undergraduate college and has organized an annual programming contest there for the past four years. More details: https://vpt.ai/
“Iru Kadal Oru Nilam“, a travelogue, is his first book in Tamil. He is currently working on translating Purappaadu, a fictionalized memoir by Writer Jeyamohan.
Linkedin: https://www.linkedin.com/in/mvisu/
Github: https://github.com/visu
Twitter: https://twitter.com/visu_m
Email: visumrs@gmail.com