Books

இரு கடல் ஒரு நிலம், 2024

நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே அது இலக்கியத்தகுதி கொள்கிறது. இந்நூல் நம் பயண இலக்கியங்களில் என்றும் அழியாத ஓர் இடத்தை வகிக்கவிருப்பது

ஜெயமோகன்

பதிப்பகம்: விஷ்ணுபுரம் பதிப்பகம்

இரு கடல் ஒரு நிலம் வாங்க


அரூ அறிவியல் சிறுகதைகள், 2021

2021இல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளின் தொகுப்பு.

என் முதல் சிறுகதை ‘வலசை’ இந்த தொகுப்பில் வெளிவந்தது

முன்னுரை: யுவன் சந்திரசேகர், சரவணன் விவேகானந்தன்

படைப்பாளிகள்: கமலதேவி, சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி, சுசித்ரா, பிரபாகரன் சண்முகநாதன், முரளிதரன், லோகேஷ் ரகுராமன், வளன், விஜய் வேல்துரை, விஜய ராவணன், விஸ்வநாதன் மகாலிங்கம், வேணு தயாநிதி

அட்டைப்படம்: டிராட்ஸ்கி மருது

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
புத்தககம் வாங்க


ஜெயமோகன் 60 சியமந்தகம், 2022

ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது… பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.

என் கட்டுரை “வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை” இந்த தொகுப்பில் உள்ளது.

தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்

அட்டைப்படம்: ஷண்முகவேல்

பதிப்பகம்: அழிசி பதிப்பகம்
புத்தககம் வாங்க


காலம் 60 சிறப்பிதழ், 2024

காலம் இதழ் கனடாவில் இருந்து ஜூலை 1990 முதல் வெளிவந்து கொண்டு இருக்கும் காலாண்டு தமிழ் இலக்கிய இதழ்.

என் சிறுகதை “பீட்டர்மாரிட்ஸ்பர்க்” காலம் அறுபதாவது இதழில் வெளிவந்தது

இதழ் ஆசிரியர்: காலம் செல்வம்

பதிப்பகம்: காலம், கனடா

புத்தககம் கிண்டிலில் வாங்க