நேர்முகம்


பதாகை இதழில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் “நரோபா” என்ற பெயரில் இளம் எழுத்தாளர்களை நேர்முகம் செய்து வெளியிட்டார். ஐந்தாறு வருடங்கள் பலருடைய நேர்முகங்கள் வெளிவந்தது. அதை உதாரணமாக கொண்டு இலக்கியத்திலும், கலைகளிலும் தீவிரமாக ஈடுபடும் ஆளுமைகளுடன் வாரம் ஒரு நேர்முகம் என திட்டமிட்டிருக்கிறேன்.

இளம் எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், வாசிப்பு குழுமங்களை நடத்துபவர்கள்,  இலக்கிய இதழ் ஆசிரியர்கள், விமர்சகர்கள், தீவிர வாசகர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் என பலருடனுமான நேர்முகங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளிவரும். நேர்முகங்களில் கேள்விகள் மட்டுமே என்னுடையவை. பதில்கள் அந்த ஆளுமைகளுடையவை.

மே 2026,

விஸ்வநாதன்.